காப்பு
உமைவணங்கு முத்தமர் தம்மக கண்காண் தமைநிறுத்து ஆத்மவழி காப்பு அருணை மாமுனி ரமணர் வாழ்க கருணை காட்டும் கந்தா வாழ்க திருமுக அககுகைத் திருவே வாழ்க உருஅறு வருஇரு சிவமே வாழ்க ஒருமலர் அதனை ஒன்றாய் ஆங்கே (5) இருமுலை நடுவன இருவிரல் வலத்தே இருப்பாய் புரித்து இதய மென்றே பொருளது தவம்தினம் உளதாய் வாழ்க ஒன்றிலே அனைத்தும் ஒன்றி இன்றி பன்முக வடிவம் பற்றிக் கொண்டு (10) ஓடும் எண்ணம் ஓடி ஆட காடும் ஆறும் காவி அணிந்து போன இடத்தில் புண்ணிய மிலையே மோன உளத்தில் மோகம் அறுத்து தானே தானே தத்துவ மெனவே (15) தானே காட்டித் தந்தாய் வாழ்க மூச்சினில் கவனம் முற்றும் வைத்து பேச்சில் ஆசை பற்றா திருந்து புத்தர் கூறிய புதுவழி அதனைப் பத்தர் யாவரும் பயில எளிதில் (20) நானார் என்றே நல்கி இங்கே தானாம் தன்னைத் தன்னில் காட்டி எந்தை ரமண ரெனுமொளி வடிவில் தந்தாய் அவ்வழி தகமை வாழ்க வந்த வினையும் வந்து போக (25) தந்த கன்மம் தாமே போகும் சிந்தை தன்னை சீவன் தன்னில் எந்த நேரமும் எளிதாய் இருப்பில் தந்த மோன தத்துவன் வாழ்க தாயை உய்க்கத் தன்கை கொண்டு (30) மாயை நீத்து மௌனம் தந்து முன்வினை அனைத்தும் முற்றிலும் அகற்றி பின்வினை எவையும் பற்றா வண்ணம் முத்தி அளித்து ஒன்றாய் கூட்டி சித்தி அருளிய குகனே வாழ்க (35) முன்னாள் தந்தைக்கு முத்தியின் வடிவம் ஒன்றாம் அந்த ஓமென பொருளும் பின்னாள் அன்னை பத்தி பண்ண அன்பின் வடிவில் அண்டம் வந்து துன்பம் துடைத்த தூயவன் வாழ்க (40) அன்பே ஒத்த அழகே வாழ்க கடலில் தேங்கும் ஓடம் போல உடலில் பொங்கும் உணர்ச்சி யாவும் வந்து போகும்! வந்தால் போனால் சிந்தை யற்று சீற்ற மற்று (45) பந்தப் புத்தியும் மனமும் அடங்கி எந்தப் பற்றும் எய்தாப் பாங்கு துறவு என்றே துய்த்தோய் வாழ்க அறநெறி நிறைமன அமுதம் வாழ்க வாய்மொழி மொழிந்து வாசகம் ஓதி (50) ஓய்ந்த மனத்தை ஓன்றாய்ப் பார்க்க மந்திர செபமும் உள்ளே செய்து மந்த புத்தி மலர்ந்த பின்னே மனதைத் தோற்றும் மூலம் தன்னை முனைப்பாய் பார்த்தால் முன்னே தோன்றும் (55) ஒரிடம் உள்ளம் ஒன்றாய் ஒடுங்கி பேரில்லா ஓரொளி பெருமான் வாழ்க ஆன்ம கேள்வி அஃதே உண்மை தான்தான் என்ற தன்மை வாழ்க துக்கம் சோகம் துவ்வும் ஆசை (60) சிக்கி உள்வரும் சிறுமை தள்ளி மனத்தில் கூர்ந்து ஆன்ம விசாரம் தினமே போதும் தொல்லை எல்லாம் தாமே செல்லும் தந்தாய் வாழ்க நாமே நம்மில் நாமாய் வாழ்க (65) ‘நானே செய்வேன்’ நச்சிய அகந்தை தானே விட்டு தானா யங்கே ‘சும்மா இருவென’ உமது போதம் அம்மா அதுவே ஆழம் வாழ்க அத்துவி தசெயல் அதுவே உத்தமம் (70) முத்தி நித்தம் சத்தியன் வாழ்க கேட்டு பாடிக் கண்ணாய் நினைத்து தொட்டு திருவடி துதித்து தொழுது நட்புர நடந்து நன்றே செய்து எட்டு பத்தி என்கிற வழியில் (75) உன்னில் உள்ள உண்மை உணர ‘ஆன்ம பத்தி அகத்தில் தேடு’ நவமே பத்தி கன்மம் ஞானம் தவமே தன்னில் தினமும் வாழ்க வருவது அதுவே வரட்டும் போவது (80) சருகாய் போகும் அதுவே சரணம் கருமம் தானாய் அருளால் நடக்கும் பொருமை என்றாய் குருவே வாழ்க பக்தரின் பக்தராய் உனது பக்தரின் பக்கமே பணிவிடை பத்தி பாங்கில் (85) சுத்த சேவை செய்யும் உறுதி நித்தம் எமக்கு நன்கு செல்லப் பித்தம் தவிர்க்கும் முத்தனே வாழ்க அத்தம் பத்தர் அனைவரும் வாழ்க பேய கந்தை பெரிதாய் நின்றால் (90) மாய மனது மறைத்து நிற்கும் காயம் வளரும் காமம் கூடும் நாயாய் செல்லும் நயந்த மனத்தை சேயாய் எம்மை சேவித் தருளி தாயாய் வந்த தலைவா வாழ்க (95) சுற்றம் யாவும் சுற்றி இருப்பின் குற்றம் காணாக் காரியம் பணித்தாய் மாற்ற மற்று மறவா கவனம் போற்றி புரித்தால் புகலே வாழ்க பத்தர் துன்பம் பார்த்து அறுப்பாய் (100) முத்தி தருபெரு சத்தி வாழ்க பத்தி ஓதிய பாங்கும் வாழ்க நித்தம் காக்கும் நின்னருள் வாழ்க வாழ்க கந்த சத்தி வாழ்க வாழ்க ரமண பகவான் வாழ்க (105) வாழ்க வாழ்க ரமண பகவான் சூரிய ஒளியாய் சுத்த ஆத்மா பாரில் வாழும் பரமே வாழ்க வாழ்க வாழ்க அன்பே வாழ்க வாழ்க வாழ்க மௌனம் வாழ்க (110) சரணம் சரணம் ரமணா சரணம் சரணம் சரணம் ரமணா சரணம் சரணம் சரணம் ரமணா சரணம் சரணம் சரணம் ரமணா சரணம்!
Umaivaṇaṅgu muttamar tammaga kaṇgāṇ Tamainiṟuttu ātmavazhi kāppu Enable inner sight and wisdom for those who worship you. Protect such devotees by establishing them in the path of Self. Aruṇai māmuni ramaṇar vāzhga Karuṇai kāṭṭum kandā vāzhga Tirumuga agakugait tiruvē vāzhga Uruaṟu varuiru sivamē vāzhga Great sage of Aruna Ramana, be blessed Showering your Compassion as Skanda, be blessed Shining pure in beauty inner cave, be blessed Come to remove the form, O’ Siva, be blessed Orumalar adanai oṇḍrāy āṅgē (5) Irumulai naḍuvana iruviral valattē Iruppāy purittu idaya meṇḍrē Poruḷadu tavamdinam uḷadāy vāzhga Bloomed in oneness, a flower enter Two digits to the right of the center Exists as I-I, Heart, it is called, Sense! Holding that day after day is penance Oṇḍrilē anaittum oṇḍri iṇḍri Panmuga vaḍivam paṭrik koṇḍu (10) Ōḍum eṇṇam ōḍi āḍa Kāḍum āṟum kāvi aṇindu Pōna iḍattil puṇṇiya milaiyē Mōna uḷattil mōgam aṟuttu Tānē tānē tattuva menavē (15) Tānē kāṭṭit tandāy vāzhga Not abiding in one’s peace always Pursuing forms in many different ways Dance and run fast with fleeting thoughts Wearing robes, visiting rivers or forests - Peace and calm never come from outside Dropping desires, one needs a quiet inside Mūccinil kavanam muṭrum vaittu Pēccil āsai paṭrā tirundu Puttar kūṟiya puduvaḻi adanaip Pattar yāvarum payila eḷidil (20) Nānār eṇḍrē nalgi iṅgē Tānām tannait tannil kāṭṭi Endai ramaṇa renumoḷi vaḍivil Tandāy avvaḻi tagamai vāzhga Keeping full attention on one’s breathing, Desiring in neither mind nor talking, Buddha showed us a great new path. To make it easy for devotees on earth, You taught a new way as “Who am I” Revealing One in One’s Self and aye My father, Lord Ramana the beauty light, Blessed us with our easier path in sight Vanda vinaiyum vandu pōga (25) Tanda kanmam tāmē pōgum Sindai tannai jīvan tannil Enda nēramum eḷidāy iruppil Tanda mōna tattuvan vāḻga My work and burden come, let’em come And go on their own, never hold some! Mind always soley fixed in one’s soul, It becomes easier to be one’s whole! Tāyai uykkat tangai koṇḍu (30) Māyai nīttu maunam tandu Munvinai anaittum muṭrilum agaṭri Pinvinai evaiyum paṭrā vaṇṇam Mutti aḷittu oṇḍrāy kūṭṭi Sitti aruḷiya kuganē vāzhga (35) With Thy Hands, Blessed Thy Mother Removing her ignorance of the other Completely released from the past deeds No other future residual work, indeed Unconditional release to merge in One O’Guha, what a blessing, a great son! Munnāḷ tandaikku muttiyin vaḍivam Oṇḍrām anda ōmena poruḷum Pinnāḷ annai bhatti paṇṇa Anbin vaḍivil aṇḍam vandu Tunbam tuḍaitta tūyavan vāzhga (40) Anbē otta aḻagē vāzhga Earlier Thou explained the meaning of OM To your father, as being as One, all its sum! Later, For your mother to pray, You Came to this world for her due! In time, removed all of her pain Adoring beauty as love, you reign! Vāymozhi mozhindu vāsagam ōdi (50) Ōynda manattai ōṇḍrāyp pārkka Mandira sebamum uḷḷē seydu Manda putti malarnda pinnē Manadait tōṭrum mūlam tannai Munaippāy pārttāl munnē tōṇḍrum (55) Oriḍam uḷḷam oṇḍrāy oḍuṅgi Pērillā ōrozhi perumān vāzhga With many thoughts coming out as speech Revive the tiring mind, as You teach Repeat mantras continuously inside Flower the mind, lowering the tide ‘Whence the mind comes from its source’, Carefully watching will guide one, a force! There is only One, all go to the same That big Light shines, with no name! Ānma kēḷvi ahdē uṇmai Tāndān eṇḍra tanmai vāzhga Tukkam sōgam tuvvum āsai (60) Sikki uḷvarum siṟumai taḷḷi Manattil kūrndu ānma visāram Tinamē pōdum tollai ellām Tāmē sellum tandāy vāzhga Nāmē nammil nāmāy vāzhga (65) Self enquiry, that is the only truth I-I is its nature, all else is untruth Miseries, never quenching desires and woes Smallness bubbling inside, ignoring all those Focusing the mind only in Self enquiry Day after day, all those bothers just flea After these distractions completely gone What remains is only real, just hold on! ‘nānē seyvēn’ nacciya agandai Tānē viṭṭu tānā yaṅgē ‘Summā iruvena’ umadu pōdam Ammā aduvē āḻam vāzhga Attuvi taseyal aduvē uttamam (70) Mutti nittam sattiyan vāzhga “I will do this”, speaks thus the ego See, and learn to free and let go “Just be quiet”, Thy words are like nectar O’Lord, that is deep with a different vector! Non dual action is the best of actions! Please grant the liberation, no factions Kēṭṭu pāḍik kaṇṇāy ninaittu Toṭṭu tiruvaḍi tudittu toḻudu Naṭpura naḍandu naṇḍrē seydu Eṭṭu patti engiṟa vaḻiyil (75) Unnil uḷḷa uṇmai uṇara ‘Ānma patti agattil tēḍu’ Navamē patti kanmam ñānam Tavamē tannil tinamum vāzhga Hearing, chanting, constantly pondering, Serving His lotus feet, worship offering, Prayer, Being a Servant, and as a friend Eight paths of devotion for one’s end Know the ultimate truth step by step! Ninth form of devotion in all its glory pep Is searching inside one’s Self, finding And realizing is staying as one binding! That is work, and non-work, that is devotion That is knowledge, so stay with no notion! Varuvadu aduvē varaṭṭum pōvadu (80) Sarugāy pōgum aduvē saraṇam Karumam tānāy aruḷāl naḍakkum Porumai eṇḍrāy guruvē vāzhga Whatever happens will happen, whatever Goes, will go like dried leaves, forever! Everything happens of its own accord Patience is the only answer you can afford! Thy words resonate everyday in our lives What an armor! Be guided, one arrives! Paktarin paktarāy unadu paktarin Pakkamē paṇiviḍai patti pāṅgil (85) Sutta sēvai seyyum uṟudi Nittam emakku nangu sellap Pittam tavirkkum muttanē vāzhga Attam pattar anaivarum vāzhga As a devotee of your devotees’ devotion Can’t wait to swim in your Grace ocean! To serve those devotees in all their needs Please give me the strength in those deeds! Day after day to keep the focus in that pursuit Remove the madness; Mind with no dispute Comes only through Your Presence direct! Bless all those devotees to become perfect! Pēya kandai peridāy niṇḍrāl (90) Māya manadu maṟaittu niṟkum Kāyam vaḷarum kāmam kūḍum Nāyāy sellum nayanda manattai Sēyāy emmai sēvit taruḷi Tāyāy vanda talaivā vāzhga (95) Ghost like wandering ego standing tall The reality will remain hidden, it’s a brawl! Body grows big, desires keep adding Mind wanders like a dog, slowly fading! Like a mother protecting her child to bliss Please save us falling in that deep abyss Suṭram yāvum suṭri iruppin Kuṭram kāṇāk kāriyam paṇittāy Māṭra maṭru maṟavā kavanam Pōṭri purittāl pugalē vāzhga Those friends and families surrounding No need to find faults in their sounding! Focus on our duty which is Self enquiry What a clear path, keep us from misery! Bhattar tunbam pārttu aṟuppāy (100) Mutti taruperu satti vāzhga Patti ōdiya pāṅgum vāzhga Nittam kākkum ninnaruḷ vāzhga Vāzhga kanda satti vāzhga Vāzhga Ramaṇa Bhagavān vāzhga (105) Vāzhga vāzhga Ramaṇa Bhagavān When in pain and suffering, no need to shout For you look after us, there isn’t a doubt You will liberate us from all these pains As long as we are devoted with no stains! That devotion is only discovering the truth Shining inside, bright and great in sooth! Be blessed for you are the force of real Bhagavan Ramana gives our soul meal! Sūriya oḷiyāy sutta ātmā Pāril vāzhum paramē vāzhga Vāzhga vāzhga anbē vāzhga Vāzhga vāzhga maunam vāzhga (110) Like a shining Sun, a great effulgence Light Has come to the earth to remove our plight! Your wisdom perfect spreads its rays! Your glance of silence sets us ablaze! Anbar vāzha Ramaṇar kavacham Inbam uykka iyaṭrum vaḍivu Ramaṇa dāsan ramittu Kamazhum mutti sīkkiram taravē. (114) Through your Grace, for devotees armor Ramana dasa to write this poetic armor, For your Grace is infinite, it’s present always Grant us your feet, and give your embrace! Saraṇam saraṇam ramaṇā saraṇam Saraṇam saraṇam ramaṇā saraṇam Saraṇam saraṇam ramaṇā saraṇam Saraṇam saraṇam ramaṇā saraṇam!