தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்
Dakshinamurti Stotra
மங்கலம் [ Mangalam ]
மன்னுமா முனிவரர் சாந்தி மன்னவே தென்முக மூர்த்தியாய்த் திகழ்ந்து மோனமாந் தன்னிலை திகழ்த்தியித் துதியிற் றன்மயஞ் சொன்னவச் சங்கரன் றுன்னு மென்னுளே.
Mannumā munivarar sānti mannavē Tenmuka mūrt-tiyāyt tikazhndu mōnamān Tannilai tigazhtti-yit tudiyiṛ tanmayañ Chonnavach Saṅkaran tunnum ennuḷē.
Sankara who appeared as Dakshinamurti to grant peace to the great ascetics, who revealed His true state of silence, and who expressed the nature of the Self in this hymn, abides in me.
நூல்
Nūl [ Text ]
மவுனமா முரையாற் காட்டு மாப்பிரம வத்து வாலன் சிவனிலைத் தவர்சற் சீடர் செறிகுரு வரன்சிற் கைய னுவகையோ ருருவன் றன்னு ளுவப்பவன் களிமு கத்த னவனையாந் தென்பான் மூர்த்தி யப்பனை யேத்து வோமே. 1
Mounamā maurai-yār kāṭṭum mābbrama vattu vālan
Siva-nilait tavar char-chīdar cheṛi-guru varan chiṛ-kaiyan
Uvagai-yōr uruvan tannuḷ uvap-pavan kaḷi-mu-gat-tan
Avanai-yān tenpāl mūrtti yappanai yēttu-vōmē. 1
1. He who teaches through silence the nature of the Supreme Brahman, who is a youth, who is the most eminent guru surrounded by the most competent disciples that remain steadfast in Brahman, who has the hand-pose indicating illumination, who is of the nature of bliss, who revels in himself, who has a benign countenance – that Father who has a south-facing form, we adore.
உலகுகண் ணாடி யூர்நே ருறத்தனு ளஞ்ஞா னத்தால் வெளியினிற் றுயிற்க னாப்போல் விளங்கிடக் கண்டு ஞான நிலையுறு நேரந் தன்னை யொருவனா யெவனேர் காண்பன் றலையுறு குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 2.
Ulagu kaṇṇāḍi yūrnēr uṛat-tanuḷ añjñā nattāl
Veḷiyi-niṛ tuyiṛ kanāppōl viḷan-giḍak kaṇḍu jñāna
Nilaiyuṛu nēran tannai oruvanā yevanēr kāṇban
Talai-yuṛu guruvām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 2
2. To him who by maya, as by a dream, sees within himself the universe which is inside him, like a city that appears in a mirror, (but) which is manifested as if external to him, who apprehends, at the time of awakening, his own single Self – to him, the primal guru, Dakshinamurti, may this obeisance be!
வித்துளே முளைபோன் முன்னம் விகற்பமி லிச்ச கம்பின் கற்பித மாயா தேய காலகர் மத்தாற் பற்பல் சித்திரம் விரிப்பன் யாவன் சித்தனு மாயி கன்போற் சத்தியாற் குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 3
Vittuḷē muḷaipōl munnam vikalpa-mil ichcha gampin
Kaṛpita māyā dēya kāla-kar mattāṛ paṛpal
Chit-tiram virippan yāvan siddanu māyi ganpōṛ
Sattiyāṛ guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 3.
3. To him who like a magician or even like a great yogi, displays by his own power this universe, which at the beginning is undifferentiated like the sprout in the seed, but which is made differentiated under the varied conditions of space, time, and karma and posited by maya – to him, the guru Dakshinamurti, may this obeisance be!
எவனொளி யுண்மை யின்மை யியைபொரு ளிலங்கு நேரே யெவனது நீயா னா யென் றிசைத்துணர்த் துவன்சேர்ந் தோரை யெவனைநேர் காணின் மீண்டு மிப்பவக் கடல்வீழ் வில்லை தவருறு குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 4
Evanoḷi uṇmai yinmai iyai-poruḷ ilaṅgu nērē
Evanadu nīyānā yen ḍṛisait-tuṇart tuvan-sērn dōrai
Evanai-nēr kāṇin mīṇḍum ibbavak kaḍalvīzh villai
Tava-ruṛu guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 4
4. To him whose luminosity alone, which is of the nature of existence, shines forth, entering the objective world which is like the nonexistent; to him who instructs those who resort to him through the text ‘That thou art’; to him by realizing whom there will be no more falling into the ocean of birth – to him who is the refuge of the ascetics, the guru Dakshinamurti, may this obeisance be!
பலதுளைக் குடத்துட் டீபப் பாய்கதிர் போல்யார் ஞானம் விழிமுதற் பொறிவாய்ப் பாய்ந்து வெளிசரித் தறிந்தே னென்ன விளங்கிடு மெவனைச் சார்ந்து விளங்குமிவ் வவனி யாவுஞ் சலமறு குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 5
Pala-tuḷaik kuḍattuḷ dīpap pāi-katir pōlyār jñānam
Vizhimudaṛ poṛi-vāip pāindu veḷi-sarit taṛindē nenna
Viḷaṅ-giḍum evanaich sārndu viḷangu-miv avani yāvuñ
Chalamaṛu guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭri. 5
5. To him who is luminous like the light of a lamp set in a pot with many holes; to him whose knowledge moves outward through the eye and other sense organs; to him who is effulgent as ‘I know’, and the entire universe shines after him – to him, the unmoving guru Dakshinamurti, may this obeisance be!
உடலுயிர் பொறிகள் புந்தி யொன்றுபா ழகமாத் தேர்வர் மடந்தையர் பால ரந்தர் மடையரேய் மூட வாதி மடமையால் விளையு மம்மா மயக்கமே மாய்க்கு ஞானத் தடையறு குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 6.
Uḍaluyir poṛigal pundi onḍṛupāzh agamāt tērvar
Maḍan-daiyar bālar andar maḍaiarēi mūḍa vādi
Maḍa-maiyāl viḷai-yum ammā mayak-kamē māykkum jñānat
Taḍai-yaṛu guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 6
6. They who know the ‘I’ as body, breath, senses, intellect, or the void, are deluded like women[1] and children, and the blind and the stupid, and talk much. To him who destroys the great delusion produced by ignorance – to him who removes the obstacles to knowledge, the guru Dakshinamurti, may this obeisance be!
இராகுபற் றிரவி திங்க ளெனவுளன் மாயை மூடப் பராவுள மொடுங்கத் தூங்கிப் பரவிட வுணருங் காலம் புராவுறங் கினனா னென்று போதனா மெவன்பு மானாய்ச் சராசர குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 7
Irāgu-paṭ ṭṛi-ravi tiṅgaḷ ena-vuḷan māyai mūḍap
Parā-vuḷa moḍuṅ-gat tūngip paraviḍa uṇaruṅ kālam
Purā-vuṛaṅ ginanā nenḍṛu bōdanām evanpu mānāych
Charā-chara guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 7
7. To him, who sleeps when the manifested mind gets resolved, on account of the veiling by maya, like the sun or the moon in eclipse, and on waking recognizes self-existence in the form ‘I have slept till now’ – to him, the guru of all that moves and moves not, Dakshinamurti, may this obeisance be!
குழவிமுன் னனவு முன்னாக் கூறுபல் லவத்தை யெல்லாஞ் சுழலினுங் கலந்தி ருந்தே சொலிக்குமுள் ளகமா நாளுங் கழல்விழு வோர்க்கார் தன்னைக் காட்டுவன் சிற்கு றிப்பாற் றழல்விழிக் குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 8
Kuzhavi-mun nanavu munnāk kūṛu-pal avattai-yellāñ
Chuzha-linuṅ kalan dirundē jolikku-muḷ agamā nāḷuṅ
Kazhal-vizhu vōrkkār tannaik kāṭṭuvan chiṛ kuṛippāl
Tazhal-vizhik guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 8
8. To him who, by means of the hand pose indicating illumination, manifests to his devotees his own Self that forever shines within as ‘I’, constantly, in all the inconstant states such as infancy and waking – to him whose eye is of the form of the fire of knowledge, the guru Dakshinamurti, may this obeisance be!
உலகையா ரிப்பு மானோக் குறும்பல நனாக்க னாவிற் கலங்கியே மாயை யாலே காரிய கார ணம்பின் றலைவனுந் தாசன் சீடன் குருமகன் றந்தை யாதி தலமுறு குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 9
Ulagaiyā rippu mānōk kuṛum-pala nanāk kanāviṛ
Kalaṅgiyē māyai yālē kāriya kāra ṇampin
Talai-vanun dāsan sīḍan guru-magan tandai yādi
Tala-muṛu guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 9
9. To the self who, deluded by maya, sees, in dreaming and waking, the universe in its distinctions such as cause and effect, master and servant, disciple and teacher, and father and son – to him, the guru of the world, Dakshinamurti, may this obeisance be!
மண்புன லனல்கால் வான மதிகதி ரோன்பு மானு மென்றொளிர் சராச ரஞ்சே ரிதுவெவ னெட்டு மூர்த்த மெண்ணுவார்க் கிறைநி றைந்தோ னெவனினன் னியஞ்சற் றின்றாந் தண்ணருட் குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி போற்றி. 10
Maṇpunal anal-kāl vāna madi-kadi rōnpu mānum
Enḍṛoḷir charā charañ-chēr idu-yevan eṭṭu mūrttam
Eṇṇuvārk kiṛai niṛain-dōn evanin anni-yañ chaṭṭṛin-ḍṛām
Taṇṇaruṭ guru-vām anda dakṣhiṇā mūrtti pōṭṭṛi. 10.
10. To him whose eightfold form is all this moving and unmoving universe, appearing as earth, water, fire, air, ether, the sun, the moon, and soul; beyond whom, supreme and all-pervading, there exists naught else for those who enquire – to him the gracious guru Dakshinamurti, may this obeisance be!
சருவமுந் தானா நன்றாய்ச் சாற்றுமித் தோத்தி ரத்தின் சிரவணந் தன்னா லர்த்த சிந்தனந் தியானங் கானம் புரிவதா லெல்லாந் தானாம் பூதிசே ரீசன் றன்மை மருவிடு மற்று மெட்டா மடிவறு செல்வந் தானே. 11
Saruva-mun tānā nanḍṛāich chāṭṭṛu-mit tōtti rattin
Srava-ṇan tannāl artta chin-tanam dhiyānaṅ gānam
Puri-vadāl ellān tānām būti-sēr īsan tanmai
Maru-viḍu maṭṭṛu meṭṭā maḍi-vaṛu selvan tānē. 11
11. In this hymn, Selfhood has been explained. By listening to it, reflecting on its meaning, meditating on it, and reciting it, there will come about mastery together with the supreme splendour consisting in Selfhood; thence will be achieved the unimpeded supernatural power presenting itself in eight forms.
[1] It should be borne in mind that in ancient times, women were not formally educated.