arul̤-ṇiṟai vāna
Sri Arunachala Pancaratnam
அருணிறை வான வமுதக் கடலே விரிகதிரால் யாவும் விழுங்கு மருண கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய் விரிபரிதி யாக விளங்கு | 1 சித்திரமா மிஃதெல்லாஞ் செம்மலையே நின்பாலே உத்திதமாய் நின்றே யொடுங்கிடுமா - னித்தியமு நானென் றிதய நடித்திடுவை யாலுன்பேர் தானிதய மென்றிடுவர் தாம் | 2 அகமுகமா ரந்த வமலமதி தன்னா லகமிதுதா னெங்கெழுமென் றாய்ந்தே - அகவுருவை நன்கறிந்து முந்நீர் நதிபோலு மோயுமே உன்கணரு ணாசலனே யோர் | 3 வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா வளியடக்க நிற்கு மனத்தா - லுளமதனி லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு முன்னி லுயர்வுறுமீ துன் | 4 உன்னிடத்தி லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுது முன்னைக்கண் டெல்லாமு முன்னுருவா - யன்னியமி லன்புசெயு மன்னோ னருணாச லாவெல்கு மின்புருவா முன்னிலாழ்ந்தே | 5 அருண கிரிரமண னாரியத்திற் கண்ட வருமறையந் தக்கருத்தே யாகு - மருணா சலபஞ் சகமணியைத் தண்டமிழ்வெண் பாவா லுலகுக் களித்தா னுவந்து அரியாதியி தரசீவர தகவாரிச குகையில் லறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன் பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந் தறிவாம்விழி திறவாநிச மறிவாயது வெளியாம் வாழ்க வானரு ணாசல வண்பெயர் வாழ்க வப்பெயர் வாய்துதி பஞ்சகம் வாழ்க வாய்மலர் மாரமணன்பதம் வாழ்க வப்பத மன்னுநல் லன்பரே
arul̤-ṇiṟai vāna amudak kaḍale viri-gadirāl yāvum viḻuṅgum aruṇa giri-paramān māve kil̤ar-ul̤appū naṇḍrāi viri-paridi yāga vil̤aṅgu | 1 chittira-mām ihdĕllāñ chĕmi-malaiye ninpāle uttida-māi niṇḍre ŏḍuṅgi-ḍumāl̤ - nittiy-amum nānĕn ḍṟida-yam naḍit-tiḍuvai yālunper tāni-dayam ĕṇḍri-ḍuvar tām | 2 aha-mukamā ranḍa amala-madi tannāl ahamidu-tān ĕṅgĕzhumĕn ḍṟāindĕ - ahavur-ruvai nanga-ṟindu munnīr nadi-polum ŏyumĕ unkaṇ-aruṇā chalanĕ yŏr | 3 vĕl̤i-viḍayam viṭṭu vil̤aṅgum aruṇĕsā val̤i-yaḍakka niṟku manat-tāl ul̤amadanil unnait dhiyā-nittu yŏgi ol̤ikāṇum unnil uyar-vuṟum īdun | 4 unni-ḍattil oppuvitta ul̤l̤attāl ĕppŏḻudum unnaik-kaṇ ḍĕllā-mum unnuruvāi - anniyamil anbu-sĕyum annon aruṇāchalā vĕlgum inbu-ruvām unnil āḻnde | 5 aruṇa giri ramaṇan āriyat-til kaṇḍa aru-maṟai-yan dakkarutte yāgum - aruṇā chalapañ chaka-maṇi-yait taṇ-ḍamiḻvĕṇ bāvāl ulaguk kal̤ittān uvandu. ariyādi yitara sīvara taha-vārisa guhai-yil arivāi-rami paramāt-tuman aruņáchala ramaņan parivā-luļa muru-gānala paranārn-diļu guhai yārndu arivām-vizhi tiravā-nisam arivāy-adu veļiyām. vāḻga vān aruṇāchala vaṇ-pĕyar vāḻga appĕyar vāi-stuti pañchakam vāḻga vāi-malar mā-ramaṇan padam vāḻga appada mannu-nal anbarĕ
(play.once) (play.loop)