சிவபுராணம் [ திருவாசகம் ]
civapurāṇam [ tiruvācakam ]
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
namaccivāya vāaḻka nātaṉ tāl̤ vāḻka imaippŏḻutum ĕṉ nĕñcil nīṅkātāṉ tāl̤ vāḻka kokaḻi āṇṭa kurumaṇitaṉ tāl̤ vāḻka ākamam ākiniṉṟu aṇṇippāṉ tāl̤ vāḻka ekaṉ anekaṉ iṟaivaṉ aṭivāḻka (1-5)
Long live Namasivaya, Long live the holy feet of our Lord,
Long live the feet of him who does not move away from my mind even for a second.
Long live the feet of my Guru who ruled over Thiruvavaduthurai(Thiruperum thurai ?)*,
Long live the feet of him who became holy books and comes near us,
Long live the feet of the God who was one but appeared as many.
vekam kĕṭuttāṇṭa ventaṉ aṭivĕlka piṟappaṟukkum piññakaṉtaṉ pĕykaḻalkal̤ vĕlka puṟantārkkuc ceyoṉ taṉ pūṅkaḻalkal̤ vĕlka karaṅkuvivār ul̤makiḻum koṉkaḻalkal̤ vĕlka ciramkuvivār oṅkuvikkum cīroṉ kaḻal vĕlka 10
Let the feet of the God who stabilized my mind be victorious,
Let the valorous anklets of Lord Shiva, who cuts off cycle of birth be victorious
Let the flower like anklets of the God, who is scarce to those who stand away from him be victorious,
Let the anklets of king who happily lives in the mind of those who salute him be victorious,
Let the anklets of that great one who uplifts those who bend their head to him be victorious.
īcaṉ aṭipoṟṟi ĕntai aṭipoṟṟi tecaṉ aṭipoṟṟi civaṉ cevaṭi poṟṟi neyatte niṉṟa nimalaṉ aṭi poṟṟi māyap piṟappu aṟukkum maṉṉaṉ aṭi poṟṟi cīrār pĕruntuṟai nam tevaṉ aṭi poṟṟi 15
Praise to the feet of God, Praise to the feet of my father,
Praise to the feet of my friend, praise to the red feet of shiva,
Praise to the feet of the pure god who stood in love,
Praise to the feet of the king who cuts off the illusion called birth,
Praise to the feet of god who is in holy Thiruperumthurai.
ārāta iṉpam arul̤um malai poṟṟi civaṉ avaṉ ĕṉcintaiyul̤ niṉṟa ataṉāl avaṉ arul̤āle avaṉ tāl̤ vaṇaṅkic cintai makiḻac civa purāṇam taṉṉai muntai viṉaimuḻutum oya uraippaṉ yāṉ. 20
kaṇ nutalāṉ taṉkaruṇaik kaṇkāṭṭa vantu ĕyti ĕṇṇutaṟku ĕṭṭā ĕḻil ārkaḻal iṟaiñci viṇ niṟaintum maṇ niṟaintum mikkāy, vil̤aṅku ŏl̤iyāy, ĕṇ iṟanta ĕllai ilātāṉe niṉ pĕrumcīr pŏllā viṉaiyeṉ pukaḻumāṟu ŏṉṟu aṟiyeṉ 25
pullākip pūṭāyp puḻuvāy maramākip pal virukamākip paṟavaiyāyp pāmpākik kallāy maṉitarāyp peyāyk kaṇaṅkal̤āy val acurar āki muṉivarāyt tevarāyc cĕllāa niṉṟa it tāvara caṅkamattul̤ 30
ĕllāp piṟappum piṟantu il̤aitteṉ, ĕmpĕrumāṉ mĕyye uṉ pŏṉ aṭikal̤ kaṇṭu iṉṟu vīṭu uṟṟeṉ uyya ĕṉ ul̤l̤attul̤ oṅkāramāy niṉṟa mĕyyā vimalā viṭaippākā vetaṅkal̤ aiyā ĕṉavoṅki āḻntu akaṉṟa nuṇṇiyaṉe 35
vĕyyāy, taṇiyāy, iyamāṉaṉām vimalā pŏy āyiṉa ĕllām poy akala vantarul̤i mĕy ñāṉam āki mil̤ir kiṉṟa mĕyc cuṭare ĕññāṉam illāteṉ iṉpap pĕrumāṉe aññāṉam taṉṉai akalvikkum nal aṟive 40
ākkam al̤avu iṟuti illāy, aṉaittu ulakum ākkuvāy kāppāy aḻippāy arul̤ taruvāy pokkuvāy ĕṉṉaip pukuvippāy niṉ tŏḻumpiṉ nāṟṟattiṉ neriyāy, ceyāy, naṇiyāṉe māṟṟam maṉam kaḻiya niṉṟa maṟaiyoṉe 45
kaṟanta pāl kaṉṉalŏṭu nĕykalantāṟ polac ciṟantaṭiyār cintaṉaiyul̤ teṉūṟi niṉṟu piṟanta piṟappu aṟukkum ĕṅkal̤ pĕrumāṉ niṟaṅkal̤ or aintu uṭaiyāy, viṇṇorkal̤ etta maṟaintiruntāy, ĕmpĕrumāṉ valviṉaiyeṉ taṉṉai 50
maṟaintiṭa mūṭiya māya irul̤ai aṟampāvam ĕṉṉum arum kayiṟṟāl kaṭṭi puṟamtol porttu ĕṅkum puḻu aḻukku mūṭi, malam corum ŏṉpatu vāyil kuṭilai malaṅkap pulaṉ aintum vañcaṉaiyaic cĕyya, 55
vilaṅku maṉattāl, vimalā uṉakku kalanta aṉpākik kacintu ul̤ urukum nalam tāṉ ilāta ciṟiyeṟku nalki nilam taṉmel vantu arul̤i nīl̤kaḻalkal̤ kāṭṭi, nāyiṟ kaṭaiyāyk kiṭanta aṭiyeṟkut 60
tāyiṟ ciṟanta tayā āṉa tattuvaṉe mācaṟṟa coti malarnta malarccuṭare tecaṉe teṉ āramute civapurāṉe pācamām paṟṟu aṟuttup pārikkum āriyaṉe neca arul̤purintu nĕñcil vañcam kĕṭap 65
perātu niṉṟa pĕruṅkaruṇaip porāṟe ārā amute al̤avilāp pĕmmāṉe orātār ul̤l̤attu ŏl̤ikkum ŏl̤iyāṉe nīrāy urukki ĕṉ āruyirāy niṉṟāṉe iṉpamum tuṉpamum illāṉe ul̤l̤āṉe 70
aṉparukku aṉpaṉe yāvaiyumāy illaiyumāy cotiyaṉe tuṉṉirul̤e toṉṟāp pĕrumaiyaṉe ātiyaṉe antam naṭuvāki allāṉe īrttu ĕṉṉai āṭkŏṇṭa ĕntai pĕrumāṉe kūrtta mĕy ñāṉattāl kŏṇṭu uṇarvār tamkaruttil 75
nokkariya nokke nuṇukkariya nuṇ uṇarve pokkum varavum puṇarvum ilāp puṇṇiyaṉe kākkum ĕṉ kāvalaṉe kāṇpariya per ŏl̤iye āṟṟiṉpa vĕl̤l̤ame attā mikkāy niṉṟa toṟṟac cuṭar ŏl̤iyāyc cŏllāta nuṇ uṇarvāy 80
māṟṟamām vaiyakattiṉ vĕvveṟe vantu aṟivām teṟṟaṉe teṟṟat tĕl̤ive ĕṉ cintaṉai ul̤ ūṟṟāṉa uṇṇār amute uṭaiyāṉe veṟṟu vikāra viṭakku uṭampiṉ ul̤kiṭappa āṟṟeṉ ĕm aiyā araṉe o ĕṉṟu ĕṉṟu 85
poṟṟip pukaḻntiruntu pŏykĕṭṭu mĕy āṉār mīṭṭu iṅku vantu viṉaippiṟavi cārāme kal̤l̤ap pulakkurampaik kaṭṭu aḻikka vallāṉe nal̤ irul̤il naṭṭam payiṉṟu āṭum nātaṉe tillai ul̤ kūttaṉe tĕṉpāṇṭi nāṭṭāṉe 90
allal piṟavi aṟuppāṉe o ĕṉṟu cŏllaṟku ariyāṉaic cŏllit tiruvaṭikkīḻ cŏlliya pāṭṭiṉ pŏrul̤ uṇarntu cŏlluvār cĕlvar civapurattiṉ ul̤l̤ār civaṉ aṭikkīḻp pallorum ettap paṇintu. 95
