link to Home page of 86-06 Edgerton Blvd, Jamaica, NY 11432-2937 - 718 575-3215
The Archives
 
utube on soundcloud
mp3 audio print link

ஆன்மவித்தை

Self-Knowledge

ānma viddai

  • பல்லவி pallavi (Refrain)
  • ஐயே யதிசுலபம் - ஆன்மவித்தை
    ஐயே ஐயே யதிசுலபம்
  • .
  • aiyē! ati-sulabam – ānma-viddai
    aiyē! ati-sulabam.
  • Lo, very easy is Self-Knowledge,
    Lo, very easy indeed.
  • அநுபல்லவி anu pallavi (Supplemental Refrain)
  • நொய்யார் தமக்குமுளங் கையா மலகக்கனி
    பொய்யா யொழியமிகு மெய்யா யுளதான்மா. (ஐயே)
  • noyyār tamak-kumuḷaṅ kaiyā malagak-kani
    poiyāy ozhiya-migu meiyāy uḷadānmā (aiyē)
  • Even for the most infirm
    So real is the Self
    That compared with it the amlak
    In one's hand appears a mere illusion. (Refrain)
  • சரணங்கள் (charanams)
  • மெய்யாய் நிரந்தரந்தா நையா திருந்திடவும்
    பொய்யா முடம்புலக மெய்யா முளைத்தெழும்பொய்
    மையார் நினைவணுவு முய்யா தொடுக்கிடவே
    மெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா -
    விளங்குமே; இரு ளடங்குமே; இட ரொடுங்குமே;
    இன்பம் பொங்குமே. (ஐயே) (1)
  • meiyāi niran-taran tānaiyā dirun-diḍavum
    poiyā muḍam-bulaga meiyāy muḷait-tezhumpoi
    maiyār ninaiva-ṇuvu muiyā doḍuk-kiḍavē
    meiyār idaya-veḷi veiyōn suyam-ānmā –
    viḷaṅ-gumē; iruḷ-aḍaṅ-gumē; iḍaroḍuṅ-gumē;
    inbam poṅ-gumē. (aiyē)
  • True, strong, fresh for ever stands
    The Self. From this in truth spring forth
    The phantom body and phantom world.
    When this delusion is destroyed
    And not a speck remains,
    The Sun of Self shines bright and real
    In the vast heart-expanse.
    Darkness dies; afflictions end;
    And Bliss wells up. | 1 |
  • ஊனா ருடலிதுவே நானா மெனுநினைவே
    நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா
    னானா ரிடமெதென்றுட் போனா னினைவுகள்போய்
    நானா னெனக்குகையுட் டானாய்த் திகழுமான்ம -
    ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;
    இன்பத் தானமே. (ஐயே) (2)
  • ūnār uḍal-iduvē nānām enum-ninaivē
    nānā ninai-vugaḷ sērōnā renu-madanā
    nānā riḍame-denḍṛuṭ pōnāl ninai-vugaḷ-pō
    nān-nān enak-gugai-yuṭ ṭānāit tigazhum-ānma
    jñānamē; iduvē mōnamē; ēka vānamē
    inbat tānamē. (aiyē)
  • The thought 'I am the body' is the thread
    On which are strung together various thoughts.
    Questing within enquiring 'Who am I?
    And whence this thought?' all other thoughts
    Vanish. And as I, I within the Heart-cave
    The Self shines of its own accord.
    Such Self-awareness is the only Heaven,
    This stillness, this abode of Bliss. | 2 |
  • தன்னை யறிதலின்றிப் பின்னை யெதறிகிலென் றன்னை யறிந்திடிற்பின் னென்னை யுளதறிய
    பின்ன வுயிர்களில பின்ன விளக்கெனுமத்
    தன்னைத் தனிலுணர மின்னுந் தனுளான்ம -
    ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே;
    இன்ப விகாசமே. (ஐயே) 3
  • tannai yaṛida-linḍṛip pinnai yedaṛi-gilen
    tannai aṛin-diḍiṛ-pin ennai uḷa-daṛiya
    binna vuyir-gaḷil abinna viḷak-kenu-mat
    tannait tanil-uṇara minnum tanuḷ-ānma –
    prakā-samē; aruḷ vilā-samē; aga vinā-samē;
    inba vikā-samē. (aiyē)
  • Of what avail is knowing things
    Other than the Self? And the Self being known,
    What other thing is there to know?
    That one light that shines as many selves,
    Seeing this Self within
    As Awareness' lighting flash;
    The play of Grace; the ego's death;
    The blossoming of Bliss. | 3 |
  • கன்மா திகட்டவிழ சென்மா திநட்டமெழ
    வெம்மார்க் கமதனினு மிம்மார்க் கமிக்கெளிது
    சொன்மா னததனுவின் கன்மா திசிறிதின்றிச்
    சும்மா வமர்ந்திருக்க வம்மா வகத்திலான்ம -
    சோதியெ; நிதானு பூதியே; இராது பீதியே
    இன்பவம் போதியே. (ஐயே) 4
  • kanmā dikaṭ-ṭavizha jen-mādi naṭṭam-mezha
    emmārg-gam ada-ninum immārg ga-mik-keḷidu
    solmā nada-tanu-vin kanmā disiṛi-dinḍṛich
    chummā amarn-dirukka ammā ahattil-ānma –
    jōtiyē; nidānu bhūtiyē; irādu bītiyē;
    inba-vam bōdiyē. (aiyē)
  • For loosening Karma's bonds and ending births,
    This path is easier than all other paths.
    Abide in stillness, without any stir
    Of tongue, mind, body. And behold
    The effulgence of the Self within;
    The experience of Eternity; absence
    Of all fear; the ocean vast of Bliss. | 4 |
  • விண்ணா தியவிளக்குங் கண்ணா தியபொறிக்குங்
    கண்ணா மனக்கணுக்குங் கண்ணாய் மனவிணுக்கும்
    விண்ணா யொருபொருள்வே றெண்ணா திருந்தபடி
    யுண்ணா டுளத்தொளிரு மண்ணா மலையெனான்மா -
    காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;
    இன்பு தோணுமே. (ஐயே) 5
  • viṇṇā diya-viḷakkuṅ kaṇṇā-diya poṛikkuṅ
    kaṇṇā manak-kaṇukkuṅ kaṇṇāi mana-viṇukkum
    viṇṇāi-oru poruḷ vēreṇṇā dirunta-paḍi
    uḷṇāḍu ḷattoḷi-rum aṇṇā malai enānmā –
    kāṇumē; aruḷum vēṇumē; anbu-pūṇumē;
    inbu tōṇumē. (aiyē)
  • Annamalai the Self, the Eye
    Behind the Eye of mind which sees
    The eye and all the other senses
    Which know the sky and other elements,
    The Being which contains, reveals, perceives
    The inner sky that shines within the Heart
    When the mind free of thought turns inward,
    Annamalai appears as my own Self,
    True, Grace is needed; Love is added. | 5 |
    Bliss wells up.


Citationscitations